ETV Bharat / state

நெடுஞ்சாலை அருகே ஆண் மான் உயரிழப்பு - வனத்துறை விசாரணை! - male deer died at perambalur

பெரம்பலூர்: செங்குணம் பிரிவு சாலையில் உயிரிழந்து கிடந்த 4 வயது மதிக்கத்தக்க ஆண் மானை வனத்துறையினர் மீட்டனர்.

மான்
மான்
author img

By

Published : Mar 12, 2020, 7:50 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், சித்தளி, முருக்கன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் தண்ணீர் தேடியும், சாலையைக் கடக்கும் பொழுதும் மான்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இன்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு ரோடு அருகே சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் மான் அடையாளம் தெரியாத வகையில் உயிரிழந்து கிடந்துள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின் பேரில், விரைந்து வந்த வனத்துறை உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 7ஆம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.