இந்தியாவில் கரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி மத்திய-மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைளை எடுத்துள்ளன.
கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவைப் போல் மலேசியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து வேலைக்குச் சென்ற பலர், மலேசியாவில் சிக்கித்தவிக்கும் சூழ்நிலை நிலவிவருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட டத்தோ பிரகதீஸ்குமார் என்பவர் மலேசியாவில் சிக்கித்தவிக்கும் 169 தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இவரது முயற்சியின் மூலம் மலேசியாவில் இருக்கும் தமிழர்கள் தனி விமானத்தில் தமிழ்நாடு திரும்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மலேசிய தமிழரான பிரகதீஸ்குமார் எடுத்த இம்முயற்சிக்குப் பல்வேறு தரப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்