பெரம்பலூர் அருகே உள்ளது இளம்பலூர் கிராமம் இந்த கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது பிரம்மரிஷி மலை இம்மலை பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று பிரம்மரிஷி மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதன்படி வருகிற 10ஆம் தேதி கார்த்திகை தீபத்தன்று மாலை 6 மணியளவில் மகா கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளது.
மலைமேல் பெரிய கொப்பரையில் 1008 மீட்டர் நீளமுள்ள திரி, 1008 கிலோ நெய் மற்றும் 50 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது கார்த்திகை தீபத்தன்று 210 சித்தர்கள் யாகமும் , 63 நாயன்மார்கள் பஞ்சலோக சிலையுடன் ஊர்வலமும் நடைபெற உள்ளது.
இதனிடையே கார்த்திகை தீப விழாவிற்காக 1008 மீட்டர் நீள திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பிரம்மரிஷி மலை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.