பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் போட்டிகள் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி என மூன்று போட்டிகளில் மொத்தம் 120-க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்று பரிசுகள் வழங்கப்பட்டன, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.
மேலும் போட்டிகளில் பங்குகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாவட்ட கலால் பிரிவு உதவி ஆணையர் சோபா, அனைத்து கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சந்திரமௌலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் புதிய பேட்டரி கார் அறிமுகம்!