பெரம்பலூரில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் குரு. கனலரசன் திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுதலையாகி பெரம்பலூர் வழியாக தனது ஆதரவாளர்களோடு 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தார்.
அப்போது, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ஜேசிபி வாகனம் குறுக்கே வந்ததால் ஆத்திரமடைந்த குரு. கனலரசனின் ஆதரவாளர்கள், ஜேசிபி ஓட்டுநரைத் தாக்கி வாகனத்தை அடித்து நொறுக்கினர்.
இதனால் ஜேசிபி ஓட்டுநர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஜேசிபி வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: சாலை மறியலில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கைது!