அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா பாதிப்பு உதவித்தொகை ரூ. 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் துறைமங்கலம், குன்னம் நியாய விலைக் கடையிலும்,
நடைபெற்றது.
ரூ. 2000 நிவாரண உதவித்தொகை
இவ்விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்துகொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் 282 நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் வழங்கினார்.
![பெரம்பலூரில் ரூ. 2000, 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கிய அமைச்சர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03:19:04:1623750544_tn-pbl-01-minister-sivasankar-programme-script-vis-tn10037_15062021150453_1506f_1623749693_408.jpg)
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர்,
தமிழ்நாடு அரசின் சீரிய செயல்பாடு காரணமாக கரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.