ETV Bharat / state

குடும்பத்தோடு சென்று வாக்களிக்க கூட்டுறவுத் துறை ஊழியர்கள் முடிவு!

பெரம்பலூர்: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் குடும்பத்துடன் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

author img

By

Published : Mar 23, 2019, 7:31 PM IST

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

பெரம்பலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில்மாநில தலைவர் சௌவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் தமது குடும்பத்துடன் சென்று நூறு சதவீத வாக்குப்பதிவை செய்ய வேண்டும், சுருக்கெழுத்து, தட்டச்சு நிலையிலுள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்காக விதிக்கப்படும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும், பதவி உயர்வு பட்டியலை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் தேர்தல் கமிஷனில் இருந்து விதிவிலக்கு பெற்று உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்கள் பெரியசாமி மற்றும் கோவிந்தராஜ், மாநில பொருளாளர் ஸ்டாலின் உட்பட சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மார்ச் - 23 / 19 பெரம்பலூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் தமது குடும்பத்துடன் சென்று நூறு சதவீத வாக்குப் பதிவு அளிப்பது எனவும், சுருக்கெழுத்து தட்டச்சு நிலையிலுள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்காக விதிக்கப்படும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும், பதவி உயர்வு பட்டியலை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் தேர்தல் கமிஷனில் இருந்து விதிவிலக்கு பெற்று உடனடியாக வெளியிட வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பெரியசாமி மாநில பொதுச் செயலாளர் -கோவிந்தராஜ் மாநில பொருளாளர் ஸ்டாலின் உட்பட சங்க நிர்வாகிகள் உறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.