ETV Bharat / state

சொந்தப் பணத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியை!

பெரம்பலூர் : பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகள் தடையின்றி கல்வி கற்பதற்காக அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது சொந்தப் பணம் மூலம் ஸ்மார்ட் போன்கள் வாங்கி வழங்கியுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியை
அரசு பள்ளி ஆசிரியை
author img

By

Published : Sep 6, 2020, 1:36 PM IST

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப்.05) ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராகவும் மூத்த பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் பைரவி (கணித ஆசிரியர்).

இவர் தான் பணிபுரியும் பள்ளியில் 10ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தம்முடைய சொந்த பணத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் 4ஜி ஸ்மார்ட் போன்கள், 4ஜி சிம்கார்டுகளை ரீசார்ஜ் செய்து வழங்கியுள்ளார். இவற்றின் மூலம், ’வீட்டில் இருந்தே பள்ளி’ என்ற அரசின் திட்டத்தைச் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இது குறித்து பைரவி கூறியதாவது, "கரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவ மாணவியர்களுக்கு வீட்டில் இருந்தே ஆசிரியர்கள் இணையம் வழியாக பாடம் எடுத்து வருகின்றனர்.

இதில், பெரும்பாலான மாணவ மாணவியர்கள் பங்கேற்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று நாங்கள் பார்த்தபோது அவர்களிடம் முறையான போன்கள் இல்லை. சில பெற்றோர் வேலைப் பார்க்கும் இடங்களுக்கு போன் எடுத்துச் சென்று விடுகின்றனர்.

ரீசார்ஜ் செய்ய வசதி இல்லாமல் இருப்பதாலும், வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலுமோ போனில் பாடம் கற்பது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. இது போன்ற பல காரணங்களால் பல மாணவர்கள் தொடர்ச்சியாக இணைய வழிக் கல்வியில் பங்கேற்க முடியாது தெரிய வந்துள்ளது.

எனவே, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் என்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு போன் மூலம் எடுக்கப்படும் பாடம் மிகவும் முக்கியம் எனக் கருதினேன். இதற்காக எனது சொந்தப் பணத்தில், ஒரு லட்சம் ரூபாய் செலவில் புதிதாக 16 ஸ்மார்ட் போன்கள், 4ஜி சிம் கார்டுகள் ஆக்டிவேட் செய்யப்பட்டும் ரீச்சார்ஜ் செய்யப்பட்டும் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் இந்தத் தொலைபேசி எண்ணை கல்வி செயல்பாடுகளுக்கு மற்றும் பிரத்யேகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், எவ்வித இடற்பாடும் இல்லாமல் தொடர்ந்து கல்வி செயல்பாடுகளில் எவரும் விடுபடாமல் பங்கேற்க வேண்டும் எனவும், லாக்டவுன் முடியும் வரையில் தாமே ரீச்சார்ஜ் செலவை ஏற்றுக் கொள்ள் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் என்னுடைய வகுப்பில் (பத்தாம் வகுப்பு ஆங்கில வழி) புதிதாக சேரும் மாணவர்களுக்கும் இதே போல வழங்க உள்ளேன். மேற்படி செலவு என்பது எனது ஒரு மாத உதியத்தை விடவும் மிகவும் அதிகம் என்ற போதிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காக என்னால் முடிந்த இந்த உதவியை செய்துள்ளேன்.

மேலும் NGO தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியால் இன்னும் பல மாணவர்களுக்கு உதவியைப் பெற்று வழங்கிட முயற்சித்து வருகிறேன்" என்றும் தெரிவித்தார்.

கணிதப்பாடம் கற்பிப்பதற்கு மாணவர்களிடையே தடையற்ற தொடர்பு என்பது மிக முக்கியம் என்றும் பைரவி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.