பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளுக்கான ஆய்வினை தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனக் குழுவினர் இன்று நடத்தினர். அதில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் குழுத்தலைவர் செம்மலை, மாவட்ட ஆட்சியர் சாந்தா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இறையூர் சர்க்கரை ஆலை, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்படும் கட்டடம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செம்மலை, ”பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். அதற்காக தமிழ்நாடு அரசிடம் பரிந்துரை செய்யப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக கல் குவாரிகள் இருப்பதால் அதனால் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்த, சம்பந்தபட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், சாலை உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி - பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்