தமிழ்நாடு முழுவதும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 21 ஆயிரத்து 183 மாணவ மாணவிகளுக்கும், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரத்து 810 மாணவர்களுக்கு அரசு இலவச பாட புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்தப் பாடப் புத்தகங்கள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி குடோனில் இருப்பு வைக்கப்பட்டு வாகனங்களின் மூலம் ஒன்றியம் வாரியாக அனைத்து பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்தப் பணிகள் மே 30, 31 தேதிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி திங்கட்கிழமை 2019-20ஆம் கல்வியாண்டிற்கான மாணவ மாணவியர்களுக்கு முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.