பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் உணவு விடுதியில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் வைத்திருப்பவர்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சிக் கூட்டமானது உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் செளமியா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உணவகங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், தூய்மை செய்வதற்கான கை கழுவும் சோப், ஆயில் போன்றவை வைத்திருக்க வேண்டும், தலை உறை உள்ளிட்டவைகளை அணிய வேண்டும் போன்ற விழிப்புணர்வுக் கருத்துகளை வழங்கினார்.
இதில் வணிக நிறுவன உரிமையாளர்கள், உணவக உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க... அவசர வழக்குகளுக்கு மட்டுமே விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் முடிவு