பெரம்பலூர் நகர்ப்புற பகுதி எளம்பலூர் சாலை மேட்டு தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ராமன் (83). இவரது மனைவியின் பெயர் ஜலகம். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்கு, பிள்ளைகள் இல்லை.
இதையடுத்து தம்பதியினர் இருவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறி வெங்கட்ராமனுக்கு வழங்கி வந்த முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டது.
வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த வெங்கட்ராமன், கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலைக்குச் செல்லாமல், வருமானமின்றி தவித்து வந்தார். இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்தில், கடந்த மே 1ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
ஊரடங்கால் வருமானமின்றித் தவிக்கும் வயதான தம்பதியினர் - அரசு உதவுமா?
இந்த தகவல் பல்வேறு சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இவர்களது நிலைமை அறிந்த பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன்,வெங்கட்ராமன் வீட்டுக்குச் சென்று ரூ 2000 பணம், அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். அத்துடன் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்குவதற்கான ஆணையும் வழங்கினார். அப்போது சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: சந்தேகத்திற்குரிய பொருளைக் கடித்த நாய் உயிரிழப்பு!