ETV Bharat / state

கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் உயரிழப்பு! - கரோனா உயிரிழப்பு

பெரம்பலூர்: கரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சைப் பெற்று வந்த 75 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்த்துள்ளது.

Elderly man who was receiving treatment for corona dies!

author img

By

Published : Jul 26, 2020, 8:19 AM IST

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா வைரஸால் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்

பெரம்பலூர் மாவட்டம் காவேரி நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (75). இவர் கடந்த ஜூலை 15ஆம் தேதி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 16ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சாகுல் ஹமீது நேற்று (ஜூலை 25) உயிரிழந்தார்.

இதன்முலம் பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 271ஆகவும், சிகிச்சை முடிந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 204ஆகவும் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.