ETV Bharat / state

போலி உரம்: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

author img

By

Published : Nov 11, 2020, 3:39 PM IST

பெரம்பலூர்: போலி உரத்தினை விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

fertilizer
fertilizer

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

மக்காச்சோள பயிருக்கு அடியுரமாக சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாக்டம்பாஸ் உரத்தினை வாங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயி

ராமலிங்கத்திடம் உரம் வாங்கிய விவசாயிகளின் மக்காச்சோள பயிர் வளர்ச்சி அடையாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்களுக்குப் போலியான உரங்களை விற்பனை செய்ததாகக் கூறி ராமலிங்கத்திடம் விவசாயிகள் நஷ்ட ஈடு கோரியுள்ளனர். நஷ்டஈடு தருவதாக உறுதியளித்த ராமலிங்கம் இதுவரை தரவில்லை.

இதனையடுத்து விவசாயிகள் போலி உரத்தினை விற்பனை செய்த ராமலிங்க மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பயிர், போலியான உரங்களைக் கொண்டுவந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டனர். அதன்பின் மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.