உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்கள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் போன்றவற்றில் மக்கள் அதிகம் கூடாமல் இருக்க மார்ச் 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மார்ச் 31ஆம் தேதி வரை திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மதுரையை எரித்த கண்ணகியின் சினம் தணித்த புண்ணிய பூமியாக விளங்கிவருகிறது. கண்ணகியே மதுர காளியம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாக வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகிறது.
பொதுவாக இக்கோயில் வார நாள்களில் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே திறந்திருக்கும். தற்போது இக்கோயில் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டதையடுத்து பக்தர்கள் கோயில் வாசலிலே சாமி தரிசனம் செய்து திரும்பிச் செல்கின்றனர்.