ETV Bharat / state

சென்னை முதல் கன்னியாகுமரி வரை திமுகவின் கோட்டை - திமுக எம்பி ஆ ராசா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியானது கன்னியாகுமரி முதல் சென்னை வரை திமுகவின் கோட்டை என நிருபிக்கப்பட்டுள்ளது என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா கூறினார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை திமுகவின் கோட்டை - ஆ ராசா

author img

By

Published : Feb 24, 2022, 7:13 AM IST

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா நேற்று(பிப். 23) பெரம்பலூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வெற்றியானது கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும் தி.மு.க.வின் கோட்டை என்று நிரூபிக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசிய தலைவராக உயர்த்தியுள்ளது எனவும், வெற்றி பெற்றவர்கள் தொண்டர்களையும் மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்த அவர், தோல்வியடைந்தவர்களை கட்சி கைவிடாது என்றும் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்த ஆ.ராசா பெரம்பலூர் மக்களுக்குத் தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பெரம்பலூர் நகராட்சி மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு, அரும்பாதீர், பூலாம்பாடி, குரும்பலூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள தலைவர் மற்றும் துணைத் தலைவர் பட்டியலை வெளியிட்டார். இக்கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சித் தலைவர்கள் தேர்வு

பெரம்பலூர் நகராட்சிக்கு அம்பிகா ராஜேந்திரன் தலைவராகவும், துணைத் தலைவராக து.ஹரிபாஸ்கர், அரும்பாவூர் பேரூராட்சி தலைவராக வள்ளியம்மை ரவிச்சந்திரன், துணைத் தலைவர் சரண்யா, குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், துணைத் தலைவராக கீதா ராஜேந்திரன், பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணைத் தலைவராக செல்வலட்சுமிசேகர், லெப்பைகுடிக்காடு பேரூராட்சிக்குத் தலைவராக ஏ.எம்.ஜாஹிர் உசேன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்தார்.

இதையும் படிங்க:கவுன்சிலர்களை கடத்திய எம்.எல்.ஏ? நெல்லை மேயர் பதவியைப் பிடிக்க திமுகவினரிடையே கடும்போட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.