ETV Bharat / state

திண்டுக்கல் ஐ லியோனியை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய ஆ. ராசா! - A Rasa criticized Chief Minister Palanisamy

திமுக பேச்சாளர் லியோனியும் இதுபோன்று பெண்களின் இடுப்பு குறித்து தவறுதலாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

திமுக எம்பி ஆ ராசா பரப்புரை
திமுக எம்பி ஆ ராசா பரப்புரை
author img

By

Published : Mar 27, 2021, 6:24 AM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கரை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "இந்தத் தேர்தல் தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் ஆவதற்கு நடக்கும் தேர்தல். மோடியின் பாட்ஷா திமுகவிலும் பலிக்கவில்லை, தமிழ்நாட்டிலும் பலிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "மு.க. ஸ்டாலின் முறைப்படி பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி நல்ல உறவில் பிறந்தவர். எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்தவர். எடப்பாடி பழனிச்சாமி குறைபிரசவத்தில் பிறந்தவர் அவரைக் காப்பாற்ற டெல்லியில் இருந்து வந்தவர் டாக்டர் மோடி" என்று அத்துமீறி கடுமையாக விமர்சித்தார்.

திமுக எம்பி ஆ ராசா பரப்புரை

தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சுக்கு அதிமுக தொண்டர்களும், முதலமைச்சர் ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்மையில் கோவையில் பரப்புரை மேற்கொண்ட திமுக பேச்சாளர் லியோனியும் இதுபோன்று பெண்களின் இடுப்பு குறித்து தவறுதலாக பேசி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.