எதிர்வரும் தேர்தலில் பெரம்பலூர் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குன்னத்தில் நேற்று (மார்ச் 19) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் மக்களிடையே பேசியதாவது:
"அதிமுக கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தல் திமுக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் வனவாசம் சென்றும் திமுக திருந்தவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.
திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதுபோல, நாங்கள் பாஜகவிற்கு அடிமை இல்லை. தமிழ்நாட்டிற்கான நலத்திட்டங்களைக் கொண்டுவருவதற்காக இணக்கமாக இருக்கின்றோம். பச்சோந்திபோல் கூட்டணி மாறும் கட்சி திமுகதான்.
எதிர்க்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் ராசி இல்லை" என்றார் ஸ்டாலின்.
குன்னத்தில் நேருக்கு நேர் விவாதம் வைத்துக்கொள்ளலாமா என்றும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விடுத்தார்.
இதையும் படிங்க:'நாங்க ஜெயிக்க நாடார் ஓட்டே போதும்' - ஹரி நாடாருடன் சிறப்பு நேர்காணல்