பெரம்பலூர் மாவட்ட டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடங்கி வைத்தார்.
தடகளம், கைப்பந்து, நீச்சல், கபடி, டென்னிஸ், இறகுப் பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.
இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடக்க நாளான இன்று தடகளத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா சான்றிதழும் பரிசும் வழங்கினார்.
மொத்தம் 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் விடுதி மேலாளர், தடகள பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:
'விடாம... ஓடணும்' - அரியலூர் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய விளையாட்டுப் போட்டிகள்