பெரம்பலூர்: குரும்பலூர் அருகேயுள்ள துறையூர் பிரதான சாலை அருகே வசித்து வருகிறார் வெங்கடேசன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக அங்கிருந்த, பழைய கூரை வீட்டை இடித்துவிட்டு, அஸ்திவாரம் தோண்டும்போது 5 பழமையான கற்சிலைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது தெரியவந்தது.
![கற்சிலைகள் கண்டெடுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12268173_thum.jpg)
பழமையான சிலைகள் கண்டெடுப்பு
இது குறித்து பெரம்பலூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வருவாய்த் துறை அலுவலர்கள் அங்கு சென்று, சிலைகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த சிலைகள் தொல்லியல் துறை ஆய்வுக்கு பின்னரே, எந்த காலத்தைச் சேர்ந்தவை என தெரியவரும்.
இதையும் படிங்க: ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்.. சிறுவனுக்கு பெரியார் சிலை பரிசு..