ETV Bharat / state

'அதிகார வர்க்கத்தின் நேரடி முகம் ரஜினி, மறைமுக முகம் கமல் ஹாசன்': கௌதமன் கடும்தாக்கு!

பெரம்பலூர்: தமிழர்களை அடக்க நினைக்கும், அடிமைப்படுத்த நினைக்கும், அழிக்க நினைக்கும் அதிகார வர்க்கத்தின் நேரடி முகம் ரஜினி, மறைமுக முகம் கமல் ஹாசன் என்று இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.

director gowthaman
author img

By

Published : Oct 2, 2019, 10:56 PM IST

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் கவிஞர் நிழலி என்பவரின் 'ஒப்பந்தம் இட்ட இரவு' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன் கூறியதாவது, கீழடி தமிழருடைய தாய்மொழி என்றும், தமிழர் நாகரிகத்தின் தொன்மைத் தொட்டிலை பலபேர் திசை திருப்பி கீழடி நாகரிகத்தின் வரலாற்றினை, அதன் உன்னதத்தை மடை மாற்றம் செய்ய நினைப்பது கண்டனத்துக்குரியது என கூறினார்.

இயக்குநர் கௌதமன் செய்தியாளர் சந்திப்பு

மேலும் அமைச்சர் பாண்டியராஜன் கீழடி நாகரிகம் ஒரு பாரத நாகரிகம் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் கீழடி நாகரிகத்தின் ஆய்வுப் பணிகளை மத்திய அரசே தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மீண்டும் மத்திய அரசு கீழடி அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி, இந்த கீழடி நாகரிகத்தை வெளிக்கொணர செய்த அமர்நாத்தை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றார்.

கீழடி நாகரிகத்திற்கு தொன்மைச் சான்றாக விளங்கும் 110 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த வேண்டும் என்றும் நேர்மையான ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கீழடி நாகரிகத்தை பற்றிய ஆய்வுப் பணிகள் நேர்மையாக நடக்கவில்லை என்றால், ஜல்லிக்கட்டு போராட்டம் போல கீழடி போராட்டமும் நடைபெறும் எனவும் கெளதமன் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய கௌதமன், தமிழர்களை அடக்க நினைக்கும், அடிமைப்படுத்த நினைக்கும், அழிக்க நினைக்கும் இந்திய அதிகார வர்க்கத்தின் நேரடியாக செயல்படுவது நடிகர் ரஜினிகாந்த் என்றும், மறைமுகமாக செயல்படுவது நடிகர் கமல் ஹாசன் என்றும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: 'நீங்கள் ஆண்டதால்தான் நாங்கள் தெருவில் நிற்கிறோம்'- ராதாரவிக்கு கௌதமன் பதிலடி!

Intro:தமிழர்களை அடக்க நினைக்கும் அடிமைப்படுத்த நினைக்கும் அழிக்க நினைக்கும் இந்திய அதிகாரவர்க்கத்தின் நேரடி முகம் ரஜினி என்றும் மறைமுக முகம் கமலஹாசன் என்றும் பெரம்பலூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குனர் கௌதமன் பேட்டி

Body:பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் கவிஞர் நிழலி என்பவரின் ஒப்பந்தம் இட்ட இரவு என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வா கௌதமன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன் கூறியதாவது கீழடி தமிழருடைய தாய்மொழி என்றும் தமிழர் நாகரிகத்தின் தொன்மை தொட்டிலை பலபேர் திசை திருப்பி கீழடி நாகரிகத்தின் வரலாற்றினை அதன் உன்னதத்தை மடை மாற்றம் செய்ய நினைப்பவர்கள் கண்டனத்துக்குரியது என கூறினார் மேலும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி நாகரிகம் ஒரு பாரத நாகரீகம் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார் மேலும் கீழடி நாகரீகத்தை ஆய்வு பணிகளை மத்திய அரசே தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் மீண்டும் மத்திய அரசு கீழடி அகழ்வாய்வு அகழ்வாய்வு பணிகளை தொடங்கி இந்த கீழடி நாகரிகத்தை வெளிக்கொணர செய்த அமர்நாத் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார் மேலும் கீழடி நாகரீகத்திற்கு தொன்மை சான்றாக விளங்கும் 110 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த வேண்டும் எனவும் நேர்மையான ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் தொடர்ந்து பேசிய கௌதமன் கீழடி நாகரிகத்தை பற்றிய ஆய்வு பணிகள் நேர்மையாக நடக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல கீழடி போராட்டமும் நடைபெறும் எனவும் எச்சரித்தார் மேலும் நடிகர் கமலஹாசன் திரைத்துறையிலும் நடித்து வருவதாகவும் அரசியல் துறையிலும் நடத்தி வருவதாகவும். சாடினார் மேலும் தமிழர்களை அடக்க நினைக்கும் அடிமைப்படுத்த நினைக்கும் அழிக்க நினைக்கும் இந்திய அதிகாரவர்க்கத்தின் நேரடியாக செயல்படுவது நடிகர் ரஜினிகாந்த் என்றும் மறைமுகமாக செயல்படுவது நடிகர் கமலஹாசன் என்றும் தெரிவித்தார்

Conclusion:இந்த நூல் வெளியீட்டு விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பேட்டி பேட்டி கௌதமன் தலைவர் தமிழ் பேரரசு கட்சி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.