பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி , வெண்பாவூர், வடகரை, முருக்கன்குடி, பாடாலூர், களரம்பட்டி, அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக இருக்கின்றன. இங்கு மான், மயில் உள்ளிட்டவை அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
ஆனால், மான்கள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் தேடி, சாலையைக் கடக்க முயலும் போது விபத்தில் அடிபட்டு உயிரிழக்கின்றன.
அதைப் போல், நீருக்காக சாலையைக் கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் உயிரிழந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ‘பழிவாங்கும்’ வெறிச் செயல் - சாலையில் மீனவர் வெட்டிக்கொலை!