ETV Bharat / state

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வா..? - அமைச்சர் சிவசங்கர் கூறியது என்ன? - பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை

தமிழ்நாட்டில் தற்போது பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

currently
currently
author img

By

Published : Dec 9, 2022, 9:02 PM IST

பெரம்பலூர்: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆதனூர், பிலிமிசை, கொட்டரை மற்றும் புதுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பைச் சந்தித்து வரும் நிலையிலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் என்பதால் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டையே தொடர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது குறித்து பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் தற்போது பேருந்து கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபட தெரிவித்தார்.

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வருவாயைப் பெருக்கிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பேருந்துகளின் பின்புறம் விளம்பரம் செய்து வருவது போல், விரைவில் பேருந்துகளின் இரண்டு பக்கங்களிலும் விளம்பரங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் சரக்கு போக்குவரத்து (லக்கேஜ்) சேவையை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மிக்கு 35-வது பலி; ஆளுநர் இனியும் தாமதிக்க வேண்டாம் - அன்புமணி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.