கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள் தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட 4 ஒன்றியங்களிலும் கரவை மாடு வளர்ப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். இப்பகுதியிலிருந்துதான் மாவட்டத்தில் அதிக அளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் ஊரடங்கு எதிரொலி காரணமாக கறவை மாடுகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் காவல் துறைக்கு பயந்து தீவன கடை வைத்திருப்பவர்கள் திறக்கப்படாத காரணத்தினாலும் தீவனங்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க... வெறிச்சோடிக் கிடக்கும் கோழிப்பண்ணைகள்