பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 526 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடிசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான பகுதியில் பருத்தி அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனால் பருத்தியை அறுவடைசெய்து பத்திரப்படுத்த முடியாமலும், விற்பனைக்கு வழியில்லாமலும் விவசாயிகள் தவித்துவருகின்றனர். அதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய-மாநில அரசுகள் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்ட நபர் கைது