கரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 343ஆக உயர்ந்துள்ளது.
பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், பெண் காவலர், நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நகராட்சி ஊழியர் உள்ளிட்ட 21 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டது.
காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டதால் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், நகராட்சி ஊழியருக்கு கரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 343ஆக உள்ளது. இதுவரை நான்கு பேர் உயிரிழந்தனர். குணமடைந்த 222 பேர் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பெற்றுவருவோரின் எண்ணிக்கை 113ஆக உள்ளது.