ETV Bharat / state

மாணவி பைக்மீது மோதிய கலெக்டரின் பெற்றோர் கார் - பகீர் சிசிடிவி காட்சிகள்! - கார் பைக் வீடியோ

பெரம்பலூர்: துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில் கல்லூரி மாணவியின் இருசக்கர வாகனத்தின்மீது, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் வந்த கார் மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Collector's Parents Car Crashed on Student Bike, CCTV footage
author img

By

Published : Nov 20, 2019, 11:54 AM IST

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைராஜின் மகள் கீர்த்தனா. பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எட். படித்து வந்த இவர், நேற்று முன்தினம் (நவம்பர் 18) மாலை துறைமங்கலம் பகுதியிலுள்ள தங்கள் விவசாய நிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தார்.

துரைமங்கலம் மூன்று ரோடு அருகே கீர்த்தனா வந்தபோது, அரியலூர் மாவட்ட ஆட்சியரின் பெற்றோர் பயணித்த, தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கீர்த்தனாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அரியலூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வராஜிடம், பெரம்பலூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் இருசக்கர வாகனத்தின்மீது கார் மோதிய விபத்தில் கீர்த்தனா தூக்கி வீசப்படும் காட்சி பார்க்கவே பயங்கரமாக உள்ளது.

மாணவியின் இருசக்கர வாகனம் மீது மோதிய கார் வீடியோ

இதையும் படிங்க: கார் மோதி தூக்கி எறியப்பட்ட மூதாட்டி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

Intro:பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன

Body:பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் அலமேலு தம்பதியரின் மகள் கீர்த்தனா இவர் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியில் ஒரு தனியார் தனியார் கல்வியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு b.ed படித்து வந்தார் இந்த நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி மாலை துறைமங்கலம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார் அவர் துரைமங்கலம் மூன்று நடுப்பகுதியில் அருகே வந்தபோது திருச்சியிலிருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் நோக்கி அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் பெற்றோர் பயணித்த தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் கீர்த்தனாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட கீர்த்தனா பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் விபத்தில் கீர்த்தனா விற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்

Conclusion:இதனிடையே இதனிடையே கார் ஓட்டி வந்த ஓட்டுநர் அரியலூர் ஐச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனிடையே விபத்தில் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதில் காரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கீர்த்தனா தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி உள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.