பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில், சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். மேலும் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேர மகா யாக வேள்வி நடைபெறும் அதன்படி சித்திரை மாத கால யாக வேள்வி இன்று நடைபெற்றது .
கணபதி பூஜையோடு தொடங்கிய குபேர யாக வேள்வியில் 96 வகை மூலிகை பொருட்கள் செலுத்தப்பட்டு யாகம் நடைபெற்றது. சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்குப் பால் தயிர், அரிசி, மாவு, மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளுக்கு பிறகு மகாதீபாராதனை நடைபெற்றது.
இந்த குபேர யாக வேள்வியில் கலந்து கொள்வதன் மூலம் கடன் பிரச்னை தீரும் செல்வ வளம் பெருகும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குபேர இறைவனைத் தரிசனம் செய்தனர்.