பெரம்பலூர் நகராட்சியில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
இந்தக் குழாயை சரிசெய்வதற்கு நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். மேலும்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
எனவே, உடனடியாக நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து குழாயை சரிசெய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும் என்பது பெரம்பலூர் பகுதி மக்களின் கோரிக்கையாகவுள்ளது.
இதையும் படிங்க: ’சமரச முயற்சியின் அடிப்படையில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ - திருமாவளவன்