பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்காச்சோளத்துக்கு அடி உரமாக அதே கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் உரம் வாங்கியுள்ளனர். ராமலிங்கத்திடம் உரம் வாங்கிய விவசாயிகள் மக்காச்சோள பயிருக்கு அடியுரம் இட்டுள்ளனர். ஆனால், மக்காச்சோள பயிர்கள் வளர்ச்சி அடையாமல் இருந்து வந்துள்ளது.
இதனிடையே, தங்களுக்கு வழங்கப்பட்ட உரம் போலி என்றும் உரம் விற்பனை செய்த ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். இந்நிலையில் வேளாண்மை துறை அலுவலர்கள் உரம் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் பரிசோதனையின் முடிவில் விற்பனை செய்யப்பட்டது போலி உரம் என தெரியவந்துள்ளது
போலி உரம் விற்பனை செய்த ராமலிங்கம் மற்றும் கார்த்தி, மொத்த உற விற்பனையாளர் சர்வேஸ்வரன் ஆகிய 3 பேர் மீது குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
போலி உரம் விற்பனை செய்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். மேலும் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.