பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், இருர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி(52). இவர் தனது இருசக்கர வாகனத்தில் டீ குடிப்பதற்காக இருரில் இருந்து சாலையை கடக்கும்போது கடலூர் மாவட்டம் நெய்வேலியிலிருந்து அதிவேகமாக திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாடாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இறந்தவரின் உடல் உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.