ETV Bharat / state

பெரம்பலூர் அருகே கார் விபத்து: 4 காவலர்கள் படுகாயம்! - Perambalur police

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்ட காரின் மீது மற்றொரு கார் மோதி காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

கார் விபத்து
கார் விபத்து
author img

By

Published : Feb 27, 2021, 10:42 AM IST

சென்னை அண்ணா நகர்ப் பகுதியில் டிராவல்ஸ் நடத்திவரும் அழகர்சாமி தனது சொந்த ஊரான போடியிலிருந்து கார் மூலம் சென்னைக்கு சென்று கொண்டிருந்தபோது, பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் என்ற இடத்தில் காரின் பின்பக்க டயர் வெடித்து சாலையின் நடுவே தடுப்புச்சுவர் மீது மோதியது.

பின்பக்கம் வந்த கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ராபின்சன், காவலர்கள் கமலா, கார்த்தி, அன்பரசு ஆகியோர் விபத்தில் சிக்கிய வாகனத்தின் மீது எதிர்பாரதவிதமாக மோதியதில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்தன.

விபத்தில் காவலர்கள் படுகாயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கார் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து: விபத்தில் மூவர் நிலை கவலைக்கிடம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.