பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ள இலுப்பைத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.
இவர் கட்டடப் பணிக்கான கலவை இயந்திரம் வைத்து கட்டட பணிகளை செய்து வருகின்றார். இந்நிலையில், இன்று (அக்.19) மதியம் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன், பெரம்பலூரில் வங்கியில் புதியதாக கணக்கு தொடங்குவதற்காக செந்தில்குமார் சென்றுள்ளார்.
வங்கிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 10 பவுன் நகைகளும், ரூ.50 ஆயிரம் பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினர், மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டளர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.