ETV Bharat / state

'முரசொலி இடத்தை திமுக திருப்பிக்கொடுத்தால், பாஜக ரூ. 5 கோடி தர தயார்' - பொன்.ராதாகிருஷ்ணன் - bjp radhakrishnan latest news

பெரம்பலூர்: முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்து மாற்றப்பட்டது என்று உறுதியானால், திமுகவுக்கு முரசொலி அலுவலக நிலம் உரிமை இல்லை என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

bjp-radhakrishnan
author img

By

Published : Nov 18, 2019, 11:50 AM IST

பெரம்பலூர் சிறுவாச்சூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பட்டதாரி கூட்டமைப்பு சார்பாக அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"பஞ்சமி நில விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மூலப் பத்திரத்தை தாக்கல் செய்து விட்டால், தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பஞ்சமி நிலமாக இருந்து மாற்றப்பட்டதாக இருந்தால் திமுகவுக்கு, முரசொலி அலுவலக நிலம் உரிமை இல்லை.

முரசொலி அலுவலக நிலத்தை தமிழ்நாடு அரசிடம் திருப்பிக் கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க பாஜக தயார்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பஞ்சமி நிலம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினிக்கு அழைப்பாணை

Intro:முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்து மாற்றப்பட்டது என்று சொன்னால் தி.மு.க வோ, முரசொலி அறக்கட்டளைக்கோ உரிமை இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பேச்சு .Body:பெரம்பலூர் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பட்டதாரி கூட்டமைப்பு சார்பாக அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
பஞ்சமி நில விவகாரத்தில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் மூலப் பத்திரத்தை தாக்கல் செய்து விட்டதாக என்று சொன்னால் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும்,
பஞ்சமி நிலமாக இருந்து மாற்றப்பட்டதாக இருந்தால் தி.மு.கவோ, முரசொலி அறக்கட்டளைக்கு உரிமை இல்லை என தெரிவித்தார். Conclusion:இந்த நிகழ்வில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.