பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜகவின் மாநிலச் செயலாளர் உமா கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், "சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்கள் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பானது என்பது போன்ற பொய்யான பரப்புரையை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றனர். அதன் கூட்டணி கட்சிகளும் மக்களிடையே தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
சிஏஏ மக்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டம் இல்லை. தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொய் பரப்புரை செய்வது பலிக்காது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை காங்கிரஸ் ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டது. நாட்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் மனமுடைந்த தாய் 1 வயது குழந்தையுடன் தற்கொலை!