தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் பயன்பாட்டோடு உணவுப் பொருள்கள் வழங்கப்படும் பணி தொடங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயோ மெட்ரிக் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய நான்கு வட்டங்களில் மொத்தம் 61 முழு நேர ரேசன் கடைகளுக்கும் பயோ மேட்ரிக் இயந்திரம் அனுப்பிவைக்கப்பட்டு, அங்குள்ள பணியாளர்களுக்கு அதன் செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பயோ மேட்ரிக் திட்டமானது, ஸ்மார்ட் கார்ட் மூலம் ரேஷன் பொருள்கள் வாங்கும் பயனாளிகள், அத்துடன் தங்களது கைரேகையையும் பதிவு செய்து ரேஷன் பொருள்களை வாங்கிச் செல்லலாம்.
மேலும் இத்திட்டமானது படிப்படியாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அமலுக்கு வரவுள்ளது.