ETV Bharat / state

உயிரி எரிவாயு பயோ கேஸ் திட்டத்தை நிறைவேற்றவும்! - permabalur

பெரம்பலூர்: மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயோ கேஸ்
author img

By

Published : Jul 31, 2019, 9:51 PM IST

பெரம்பலூர் நகராட்சி சார்பில் புறநகர் பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களில் உணவு தயாரிக்க மாதந்தோறும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் தேவைப்படுகின்றன.

அதையடுத்து நகராட்சிக்கு அதிகமான செலவு ஏற்படும் சூழ்நிலையில் இதை எதிர்கொள்ளும் வகையில் மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டமானது பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ஆகிய இரண்டிற்கும் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டது.

உயிரி எரிவாயு பயோ கேஸ் திட்டத்தை நிறைவேற்றவும்!

அதன்படி இத்திட்டத்திற்காக ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உயிரி எரிவாயு தயாரிப்பதற்கான திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனிடையே இத்திட்டத்திற்காக இரண்டு இடங்களில் உள்ள அம்மா உணவகங்கள் அருகே குழி தோண்டப்பட்டு உயிரி செரிமானக் கொள்கலன்களும் அமைக்கப்பட்டன. இந்த கொள்கலன்கள் பொதுக்கழிப்பறையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், உயிரி எரிவாயு தயாரிப்புத் திட்டப் பணிகள் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்ட பணிகளில் அனுமதியின்றி வாகனம் நிறுத்தப்பட்டு சேதம் அடையும் தருவாயில் உள்ளது. எனவே உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:பெரம்பலூர் நகராட்சியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்

Body:பெரம்பலூர் நகராட்சி சார்பில் புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன இந்த உணவகங்கள் உணவு தயாரிக்க மாதந்தோறும் சராசரியாக 50 க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள் தேவைப்படுகின்றன இந்நிலையில் நகராட்சி அதிகமான செலவு ஏற்படும் சூழ்நிலையில் இதை எதிர்கொள்ளும் வகையில் மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் முடிவு செய்யப்பட்டு அந்த திட்டமானது பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் உள்ள அம்மா உணவகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் அருகிலும் செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்தில் முடிவெடுக்கப்பட்டு அதன்படி இத்திட்டத்திற்காக 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உயிரி எரிவாயு தயாரிப்பதற்கான திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இதனிடையே இத்திட்டத்திற்காக இரண்டு இடங்களில் உள்ள அம்மா உணவகங்கள் அருகே குழி தோண்டப்பட்டு உயிரை செரிமானக் கொள்கலன்களும் அமைக்கப்பட்டது இந்த கொள்கைகளையும் பொதுக்கழிப்பறை இணைக்கும் வகையில் வாய்ப்பளிக்கப்பட்டது இதன்மூலம் கழிப்பறையிலிருந்து மனித கழிவுகள் மூலம் உயிரை செரிமான கொள்கைகள் எனக்கு அனுப்பப்பட்டு அங்கு நவீன எந்திரம் மூலம் உயிரி எரிவாயு தயாரிக்கப்படும் தொடர்ந்து உயிரி எரிவாயு குழாய் மூலம் அம்மா உணவக சமையல் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் மேலும் இந்த உயிரி எரிவாயு பாதுகாப்பாக கொண்டு செல்ல கட்டுப்பாடு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன நிலையில் அம்மா உணவக பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை இயந்திரம் மூலம் அழைத்து உயிரி எரிவாயு தயாரிக்க சோதனையும் நடத்தப்பட்டது இத்திட்டத்தின் மூலம் மாட்டுச் சாணத்திலிருந்து சாண எரிவாயு தருவதுபோல் மனிதக் கழிவுகளில் இருந்து நேரடியாக உயிரி எரிவாயு தயாரிக்கப்படுகிறது

Conclusion:உயிரி எரிவாயு தயாரிப்பு திட்டப் பணிகள் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டு 19 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த உயிரி எரிவாயு தயாரிக்கும் திட்ட பணிகளில் இடங்களில் அனுமதி இன்றி வாகனம் நிறுத்தப்பட்டு சேதம் அடையும் தருவாயில் உள்ளது உடனே இந்த திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.