தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மத்திய அரசின் தணிக்கைத் துறையில் சீனியர் ஆடிட்டிங் அலுவலராக பணிபுரிந்து வந்தார். பெரம்பலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தணிக்கைக்காக தூத்துக்குடியில் இருந்து வந்திருந்த அவர் நேற்றிரவு உணவு உண்பதற்காக பாலக்கரை அருகே சாலையில் நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது, திருச்சியிலிருந்து பெரம்பலூர் நோக்கி வேகமாக வந்த TRR என்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாரிகள்; தீயில் கருகி நாசம்!