தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமோகன், பெரம்பலூரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஏழு ஆண்டுகள் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். சமீபத்தில் இவருக்கும் தனியார் உணவக விடுதி நடத்திவரும் கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தொடர் நட்பினால் ஹோட்டல் பார்ட்னராக மாறினார் காவலர் சந்திர மோகன்.
இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளர் கார்த்திக், பெரம்பலூர் குற்றப்பிரிவு காவல் துறையிடம் தன்னிடம் நட்பாகப் பழகிய காவலர் சந்திர மோகன் பல லட்சம் மோசடி செய்துள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் வளர்மதி தீவிர விசாரணை நடத்தினார். அதில், சந்திரமோகன் ஹோட்டல் பார்ட்னர் மட்டுமின்றி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சக காவலர்களிடம் ரூ. 100-க்கு 5 ரூபாய் வட்டி எனக் கூறி ரூ. 2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இது குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து காவலர் சந்திர மோகனை கைதுசெய்தனர். மேலும், அவரிமிருந்து 2 கார்கள்,1 புல்லட் ஆகியவற்றை பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு