பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேரடி திடலில், திராவிடர் கழகம் சார்பில் நீட்தேர்வு எதிர்ப்பு குறித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பரப்புரை பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய வீரமணி, அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் தமிழ்நாட்டை அடகு வைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், இந்த நீட் தேர்வு அமலாக்கப்பட்டது ஒரு மாநிலத்தின் உரிமையை பறிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, " தமிழ்நாட்டில் பெரியார் சிலை உடைப்பு என்பது மதவெறி கயவர்களால் நடைபெறும் இச்சம்பவங்களை பெரியார் தான் இருக்கிற காலத்திலேயே சந்தித்தவர். இன்னமும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்" தெரிவித்தார்.
இதையும் படிங்க:'வயசோ 106... ஆனா, பெயரோ சின்னப்பையன்' - மூத்த வாக்காளரை நேரில் கௌரவித்த துணை ஆட்சியர்!