பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பிறகு விழா தொடங்கியது.
இதில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள் இந்தப் போட்டியில் பங்குபெற்றனர்.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கும் மாடுகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்தது. மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற காளைகள், வீரர்களுக்கு சேர் , சோபா, கட்டில், ரொக்கப்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு - விஎச்பி கடும் தாக்கு!