ETV Bharat / state

ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! - ஊதிய உயர்வு வேண்டி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பாக ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Perambalur Anganvadi employees protrst
பெரம்பலூர் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Oct 21, 2020, 7:00 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே. மணிமேகலை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.24 ஆயிரம், உதவியாளருக்கு ரூ.18 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், பென்சன் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

உள்ளூர் மாவட்ட வட்டார பணிமாறுதல் வழங்கிட வேண்டும், பத்து வருடம் பணி முடித்த முதன்மை மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் வழங்கிட வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் மற்ற துறைகளில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கார் ஓட்டுநர்கள் விவகாரம்: வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.