பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு எண்ணிக்கையின் போது கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கட பிரியா தலைமையேற்ற இக்கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான பத்மஜா, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.