பெரம்பலூரில்செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக ஒரு கட்சியை விலைக்கு வாங்கியுள்ளது. அந்த கட்சி அவர்களின் எதிரி என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
மத்திய, மாநில அரசுகளுக்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மேலும் பாஜக அதிமுகவை மிரட்டி பணிய வைப்பதற்காகவே வருமானவரிச் சோதனைகளை நடத்தியது. சூழலியல் போராளி முகிலன் காணாமல் போன விவகாரத்தில் தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.