புதுடெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறையின் தற்போதைய செயலாளர் கிரிதர் அரமனே, வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து தற்போது பாதுகாப்புத்துறை செயலாளர் சிறப்பு பணி அதிகாரியாக உள்ள ராஜேஷ் குமார் சிங் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Shri Rajesh Kumar Singh, IAS took over as Defence Secretary in South Block today. Earlier in the day, he paid tributes to the bravehearts and laid a wreath at National War Memorial in New Delhi.
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) November 1, 2024
More: https://t.co/CEy0zH5U1z pic.twitter.com/95Rdr768VI
கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜேஷ் குமார் சிங் 1989ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவராவார். இதற்கு முன்பு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் செயலாளராக இருந்தார்.அதற்கும் முன்பாக மத்திய கால்நடைத்துறை மற்றும் பால்வளம், மீன் வளத்துறை செயலாளராகவும் இருந்தார். மேலும் மத்திய அரசு, கேரளமாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை செயலாளராகப் பொறுப்பேற்கும் முன்பு, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்