பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக சார்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் தொடர்பாகவும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைத்திலிங்கம் எம்.பி., ' மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசு இங்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு செயல்படாத அரசு என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியில்லை. என்றவரிடம், அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை குறித்து கேட்டபோது, கூட்டணி பற்றி பேசுவதற்கு அவர் வரவில்லை; மாறாக அரசு நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்காக வருகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தோம், தற்பொழுதும் கூட்டணியில் இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் நான்கு மாத காலங்கள் உள்ளன. கூட்டணி பற்றி பேசுவதற்கு கால அவகாசம் உள்ளது என்று கூறினார். தொடர்ந்து நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டோம் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டோம்' எனவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மழை பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான திட்டமிடல் இல்லை - கனிமொழி