பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு அனைத்து விவசாய சங்கங்கள், பால் உற்பத்தியாளர் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து விவசாய சங்கங்கள், பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், கரோனா வைரஸ் ஊரடங்கு காரணம் காட்டி, கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகளிடமிருந்து பாலை முழுவதும் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர்.
எனவே பால் உற்பத்தியாளர்களிடம் பாலை முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும், பயிர்க்கடன், பால் மாடு கடன், புதிய கிணறு வெட்ட கடன் உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நீண்ட கால கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் வழங்கினர்.