பெரம்பலூர் மாவட்டம், இரூர், கூத்தனூர், சத்திரமனை, மங்குன் உள்ளிட்ட இடங்களில் பெரிய வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு வருவதாக திருச்சி உள்கோட்ட குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை அலுவலர்ளிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி வியாபாரிகள் ஆலத்தூர் வட்டாரப் பகுதிகளில் குடோன்களை வாடகைக்கு எடுத்து பெரிய வெங்காயத்தைப் பதுக்கி வைப்பது இந்த விசாரணையில் தெரிய வந்தது. இதனடிப்படையில், நான்கு குடோன்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 483 டன் பெரிய வெங்காயத்தை குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இந்தப் பதுக்கலில் தொடர்புடைய இரூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், முத்துச்செல்வம், சத்திரம் மனையை சேர்ந்த அழகேசன், நடராஜன், இடைத்தரகராக செயல்பட்ட வீரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், துறையூர், கல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி பாலாஜி என்பவருக்கும் இதில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாடாலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பதுக்கிவைக்கப்பட்டிருந்த 450 டன் வெங்காயம் பறிமுதல்