கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்காமல், கூட்டமாக பொருள்கள் வாங்குவதைக் கண்ட சமூக ஆர்லவர்கள், அரசின் உத்தரவுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது வேதனையளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று, பெரம்பலூர் நகர்ப்புற பகுதிகளில் தேவையற்ற வகையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் கரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், ஊரடங்கு உத்தரவின் நலன் குறித்தும் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்கள், கார்களில் அதிக அளவில் பொதுமக்கள் பொதுவெளியில் சுற்றி வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க, ஊரடங்கு உத்தரவிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மதிக்காத நாமக்கல் வாசிகள்; கெடுபிடி காட்டும் போலீஸ்!