நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷிக் என்பவரும் ஒருவர். இவர் நாள்தோறும் இரவு வேளையில் தனது காதலியுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதேபோல நேற்றிரவு இவர் நூற்பாலை அருகே உள்ள கிணற்று பகுதியில் நின்றுகொண்டு காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்தார்.
இரவு நேரம் என்பாதால் இவரது கூச்சல் அருகிலிருக்கும் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் இரவு முதல் காலை வரை சுமார் 10 மணி நேரம் கிணற்றுக்குள் தத்தளித்தவாரே இருந்துள்ளார். பின்னர் காலையில் இவரைக் கண்ட மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர். தற்போது அவர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: விபரீதம் ஆன வேடிக்கை- திபுதிபுவென கிணற்றுக்குள் விழுந்த 40 பேர்!